கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் கானியா பெனிஸ்டர் இன்று நான்காவது தடவையாக சிஐடியில் முன்னிலையானார்.
நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, சுவிஸ் தூதரின் இல்லத்தில் வாக்குமூலம் பெற சிஐடிக்கு உத்தரவிடும்படி கானியாவின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் அந்த அவர்கள் விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரி்த்திருந்தது.
அத்துடன் சுவிஸ் தூதரகம் வெளிநாட்டு தூதரகம் என்பதால் அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாதென கூறிய நீதிபதி , தகுதிவாய்ந்த மனநல வைத்தியர் குழுவின் முன்பாக பணியாளரை முன்னிலைப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வரும் 16ம் திகதிக்கு முன்னதாக அனைத்து விசாரணைகளும் பூர்த்தியாகுமென சிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 17ம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

