மகா சங்கத்தினருக்கு இதுவரையில் தலைமைத்துவமொன்றை வழங்க எவருக்கும் முடியாதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை தியசெத்புரவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மகா சங்கத்தினருக்காகவுள்ள சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் மகா சங்கத்தினரின் அபிவிருத்திக்கு முறையாக பயன்படுத்தப்படுவதில்லை.
பாரியளவிலான நிதி பௌத்த விகாரைகளுக்கு சேர்கின்றன. இருப்பினும், அந்த நிதி சங்கத்தினரின் நலன்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லையெனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆத்மீக தலைமைத்துவமொன்று இன்றுவரை காணப்படாதுள்ளதாகவும், நாடு முழுவதும் சென்று மகா சங்கத்தினர் அதனை வழங்குவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தான் பெற்ற அறிவை சங்கத்தினருடன் பகிர்ந்து கொள்ள விருப்பத்துடன் உள்ளேன் எனவும் தான் தர்மத்தைக் கண்டு அதில் இன்பம் கண்டு வாழ்ந்து வருவதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் மேலும் கூறியுள்ளார்.

