பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு மாவட்ட பேராயர் காதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று முன்தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவருக்கும் இடையில் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இன்று (06) பிற்பகல் கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

