புதிய அரசாங்கத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்றுள்ள அமைச்சுக்களுக்குரிய பொறுப்புக்கள் மற்றும் அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் என்பன தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சுக்களுக்கு நிறுவனங்களை ஒதுக்கும் நடவடிக்கை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களுக்குரிய விடயதானங்களும் இந்த வர்த்தமானியில் பிரத்தியேகமாக ஒதுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

