முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ரஞ்ஜன் ராமநாயக்க எம்.பி. ஆகியோர் தேர்தலில் போட்டியிட முன்வருவார்களாக இருந்தால், அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கான அவகாசம் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க எம்.பி. கூறியுள்ளார்.
அவர்கள் இருவரும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லையென்றோ, அவர்களுக்கு வேட்பாளர் அனுமதி வழங்கப்படுவதில்லையென்றோ எங்கும் தெரிவிக்கப்படவில்லையெனவும் நேற்று சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற முடியுமான வேட்பாளர்களையே எதிர்வரும் தேர்தலில் களமிறக்கவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியிலுள்ள முதுமையடைந்துள்ள பலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

