ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டு, கட்சி ஒழுங்கை மீறிய சகல எம்.பிக்களினதும் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
ஏ.எச்.எம்.பௌசியை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், அவருக்கு தேவையானால் சட்ட உதவியை நாடமுடியும் எனவும் கூறியுள்ளார்.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

