ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 4.30 மணியளவில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்தும் இதன்போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

