பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பைக் கலைக்கப் போவதாக அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் இன்று அறிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டு பௌத்த மக்களுக்கு ஒரு தந்தை கிடைக்கப் பெற்றுள்ளது. பௌத்தர்களைத் தலைநிமிர்ந்து வாழ வைக்கக் கூடிய ஒருவர் உருவாகியுள்ளார்.
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிங்களவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களைப் பேசுவதற்கு சிங்கள தலைவர்கள் பயப்பட்டனர். இந்த நாட்டின் வரலாற்று ரீதியிலான உரிமச் சான்றிதழைப் பெற்றிருந்த பௌத்தர்கள், வாடகை வீட்டில் வசிப்பது போன்று வாழ்ந்து வந்தனர்.
இன்று சிங்களவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். இதனை இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினர் தமக்கு ஒரு அச்சுறுத்தலாக கொள்ள வேண்டியதில்லை. நாம் இந்த நாட்டில் பொதுத் தேர்தல் வரையில் சில செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் எமது அமைப்பைக் கலைத்துவிட தீர்மானித்துள்ளோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

