ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு ஏற்ப புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இடமளிப்பதா? அல்லது தொடர்ந்தும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதா? என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (20) அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகளாகவுள்ள கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தை ஒப்படைக்கவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் கொண்டிருப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

