இலங்கையின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரான தி.மு. ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (19) மரணமடைந்துள்ளார்.
தி.மு. ஜயரத்ன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக இருக்கும் நிலையிலேயே மரணித்துள்ளார்.
இலங்கையின் 14 ஆவது பிரதமராக செயற்பட்ட அவர் தனது 90 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 13 ஆவது உறுப்பினராக பதிவாகியுள்ளார். அத்துடன், இவர் கடந்த 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் பாராளுமன்றம் பிரவேசித்துள்ளார்.

