மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெற்றது.
தற்போது வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டடுள்ள நிலையில் இரவு 8.30 மணியளவில் வாக்கு என்னும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 71.7 வீதமான வாக்குகள் பாதிவாகியுள்ளதாக மன்னார் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் வாக்கு என்னும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாவட்டச் செயலகம் சூழ்ந்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

