ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1300 பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லல் மற்றும் அதிகாரிகள், பொலிஸாரின் பிரயாண நடவடிக்கைகளுக்காகவே இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
குறித்த பஸ் சேவைகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் ஒரு பஸ் இற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து நாளொன்றுக்கு 15000 ரூபாவை போக்குவரத்து சபை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

