தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் தகுந்த காரணங்கள் இன்றி கடமையைப் புறக்கணித்தால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தல் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் நியாயமற்ற காரணங்களை ஆதாரம் காட்டி கடமையிலிருந்து தவிர்ந்து கொள்ளவுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் இப்படியான அரச ஊழியர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து ஒரு லட்சம் ரூபா தண்டப் பணமும், மூன்று வருட கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

