ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையிலான நிருவாகக் குழுவினர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
அரச வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குதல், இரட்டைக் குழந்தைகளுக்கு ஜனாதிபதி செயலக நிதியிலிருந்து உதவி வழங்குதல், ஜனாதிபதி செயலணியின் வினைத்திறன் விருதை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று இடம்பெறவுள்ளன.
இன்று நண்பகல் முதல் மாலை வரையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

