ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இன்று (11) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8.30 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில், அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தேர்தலின் பின்னரேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

