ஜனாதிபதிதேர்தலில் இருந்து சிவாஜிலிங்கம் விலகவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றுயாழில்நடந்த ரவிராஜ் நினைவு நிகழ்வில்உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
ரவிராஜ்எல்லோருடனும் அன்பாக பழகிய நபர் என்றும் நாடாளுமன்றத்திற்குள் எல்லா உறுப்பினர்களுடனும் அன்பாகபழகினார். சிங்கள மக்கள் மத்தியில்சிங்கள மொழியில் உரையாற்றி, தமிழ் மக்களின் பிரச்சனைகளைபுரிய வைத்ததை பொறுத்துக் கொள்ளமுடியாத சிங்கள தீவிரவாத தலைவர்கள்அவரை கொலை செய்தார்கள் எனகூறிய சம்பந்தர் அதைவிட அவர்கொல்லப்பட வேறெந்த காரணமும்இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் நாங்கள்வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதாகவும்,அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்தார்என்பதை நான் சொல்ல தேவையில்லைஎன்றும் நாம்சிந்தித்து வாக்களித்திருந்தால் இவ்வளவு அழிவை சந்தித்திருக்கமாட்டோம் எனவும் சம்பந்தர் தெரிவித்துள்ளார்.
எனவே தம்பிசிவாஜிலிங்கத்தை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் என்க்கூறிய சம்பந்தர், தயவுசெய்துஇந்த தேர்தலில் இருந்து விலகுங்கள் என்கின்ற கோரிகையினையும் விடுத்துள்ளார்.
மேலும் தனதுகோரிக்கையை சிவாஜிலிங்கம் தவறாகபுரிந்து கொள்ள மாட்டார் என்றும்நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் யாருடையவெற்றி எமக்கு சாதகமாக இருக்கும்,யாருடைய வெற்றி எமக்கு பாதகமாகஇருக்கும் என்பதை சிந்திக்க பார்க்க வேண்டும்எனவும் கூட்டமைப்பின் தலைவர் இதன்போதுமேலும் தெரிவித்துள்ளார்..

