அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் உள்பட 17 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரபல தொழில் அதிபரும், அமெரிக்காவின் 9 ஆவது மிகப்பெரிய பணக்காரருமான மைக்கல் புளூம்பெர்க் (வயது 77) ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வீழ்த்துவதற்கு தற்போதைய வேட்பாளர்கள் களம் போதுமானதாக இல்லை என்று நியூயார்க் நகர முன்னாள் மேயரான மைக்கல் புளூம்பெர்க் கவலை கொள்வதாக அவரது ஆலோசகர் ஹோவர்ட் வொல்ப்சன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முறைப்படி இணைவதற்கான ஆவணங்களை இன்னும் ஓரிரு நாட்களில் அலபாமா மாகாணத்தில் மைக்கல் புளூம்பெர்க் தாக்கல் செய்வார் என ஹோவர்ட் வொல்ப்சன் கூறியுள்ளார்.

