சிலி நாட்டு அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர் களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அந்நாட்டு அதிபர் செபாஸ்டியன் பினெரா பதவி விலகக் கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சாண்டியாகோவில் உள்ள சாலைகளில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிராக குரலெழுப்பியதில் வன்முறை வெடித்தது.
இதுவரை அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும், பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்களை மோசமாக நடத்தி கொடுமைப்படுத்தியதாக 800க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

