புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிப்பு நிலையம் தொடர்பில் கரத்தீவு மக்கள் தீர்வு கோரிய போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வழங்கிய பதிலையடுத்து அக்கூட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (08) கரத்திவு பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர், அங்கு கூடிய மக்கள் அருவக்காலு குப்பை பிரச்சினை தொடர்பில் தங்களது தீர்வு என்னவென கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்தலின் பின்னர் அதற்கான பதிலைக் கூறுகின்றேன் என அவர் பதிலளித்தபோது அங்கு கூடிய மக்களுக்கிடையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புத்தளம் மாவட்டத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ஸ்ரீ ல.சு.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

