சேறு பூசுவது என்பது வேறு, உண்மையை கூறுவது என்பது வேறு எனவும், தாம் கூறும் விடயங்கள் பொய்யென்றால் தமக்கு எதிராக வழக்குத் தொடுக்கலாம் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரச ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய சபை உறுப்பினரான லால்காந்த, அநுர குமார திஸாநாயக்காவின் கூட்டமொன்றில் கோட்டாபய ராஜபக்ஸவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தமை குறித்து அவரிடம் வினவப்பட்டதற்கே ரில்வின் சில்வா எம்.பி. இவ்வாறு பதிலளித்துள்ளார்.
எமது கட்சியின் கொள்கைகள் தொடர்பாக மக்களுக்கு கருத்துக் கூறுவது போல் ஏனையோரின் தவறுகள், ஊழல்கள், குற்றங்கள் பற்றி தெரிவிப்பதும் எமது கடமையாகும். சேறு பூசுவது எமது நோக்கமல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

