ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராயும் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) காலை 11.00 மணிக்கு இராஜாகிரியவிலுள்ள மத்திய வங்கி செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர், உதவி தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தலோடு தொடர்புபட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அடுத்து வரும் நாட்களில் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது, தேர்தல் நாளான்று கையாளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் உட்பட பல்வேறு பட்ட விடயங்கள் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படவிருப்பதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

