புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாரியளவில் கூட்டங்களை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒவ்வொரு பிரமாண்ட பிரசாரக் கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவுள்ளதுடன், வட்டார அடிப்படையிலும் கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

