மக்களை ஏமாற்றி தனது அதிகார தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாக நவம்பர் 16ஆம் திகதி முற்றாக தோல்வியடையச் செய்யப்படும் என்பதில் தனக்கு நம்பிக்கையிருப்பதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உங்களது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தேர்தல் செயற்பாடுகளுக்கு கௌரவத்துக்குரிய மகா சங்கத்தினரை இணைத்துக் கொண்டு பயணிக்க மேற்கொண்ட ஏமாற்றுத் தனமான முயற்சிகளை நான் கடுமையாக நிராகரிக்கின்றேன்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாட்டுக்கு எந்த துரோகத்தை செய்வதற்கும் துரோகம் செய்யும் எவருடனும் இணைவதற்கும் பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தயாராகவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது நாட்டின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு, சுயாதீனத் தன்மை ஆகியவற்றில் நான் நோக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக காணப்படுவது அடிப்படை வாதிகளின் குழுவாகும். அவர்களுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் எமது நாட்டு மக்களை அச்சுறுத்தியும் பிளவுபடுத்துவதிலும் முயற்சிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் வழிநடத்தும் அரசியல் கூட்டணி எமது நாட்டின் இதுகால வரையில் கண்டு கொள்ளப்பட்ட அனைத்து அடிப்படைவாதிகளால் நிறைந்து காணப்படுகின்றது.
உங்களுடைய சகோதரரான வேட்பாளருக்கு ஒரு விவாதத்திற்கு முகங்கொடுக்கவோ முக்கியமான கேள்விக்கு பதிலளிக்கவோ தைரியமில்லாததினால் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமையினால் உங்களால் அதை நாட்டு மக்களுக்கு கூறமுடியும்.
பிள்ளையானுடன் உங்களுடைய இரகசிய கொடுக்கல் வாங்கல், வரதராஜப் பெருமாளுடன் உங்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல், கருணா அம்மானுடன் உங்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடனான உங்கள் இரகசிய உடன்படிக்கை என்ன?
இந்த ஓராண்டு நிறைவன்று இந்த நாட்டு மக்கள் உங்களுடைய அதிகார தாகத்தை விட அவர்களுடைய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை சாட்சியமாக ஒப்புவிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

