பாதுக்க கலகெதர பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 9 மணிக்கும் 9.30 க்கும் இடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்தை மூடி கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைதந்த இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கலகெதர பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

