ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அமைப்பாளர்கள் பலர் அதிருப்பதி வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம், சந்திரிக்கா தலைமையில் “நாங்கள் இலங்கை” என்ற அமைப்பினால் விசேட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு, சுகததாஸ உள்ளக அரங்கில் மாநாடு இடம்பெற்றது.
இதில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட அமைப்பாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

