எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு 75 வீதம் பூர்த்தி அடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் ரஞ்சனி ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கு இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
மேலும் ஏதேனும் ஒரு வேட்பாளர் வேட்பு மனு கையளிக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு வேட்பாளருக்காக முன்னிலையாகின்றமை மற்றும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றமை நெறி முறைகளை மீறும் செயல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள நெறி முறைகள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

