புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி என்ற எண்ணக்கரு மூன்று மொழிகளிலும் பரஸ்பர கருத்து முரண்பாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால், இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள ஊடகங்களினால் வாரத்துக்கு ஒரு முறை தொடுக்கப்படும் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Unity என்ற சொல்லுக்கு கொடுத்துள்ள விளக்கம் தனக்கு தெளிவில்லாது காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

