இனிமேல் எச்சந்தர்ப்பத்திலும் இந்நாட்டில் பயங்கரவாதம், அடிப்படைவாதம், இனவாதம் என்பன தலைதூக்க நான் இடமளிக்கமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது ஒரே நாடு, நாம் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். என்னிடம் இரகசிய ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் இல்லை.
அனைத்து மக்களையும் ஒருதாய் மக்களாக பார்க்கும் யுகம் தோன்ற வேண்டுமாயின் எதிர்வரும் தேர்தலில் என்னுடன் கைகோர்த்து அன்னம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நன்றாக வாசியுங்கள். அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நான் ஜனாதிபதியாக வந்து நிறைவேற்றுவேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

