ராஜபக்ஷ குடும்பத்தின் இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அரசாங்கத்தை பாதுகாப்பதே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து புல்மோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியும் அதன் ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்தகால தேர்தல்களில் தெற்கிலுள்ள சிங்கள மக்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷ குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்ததாக பேசினார்கள். ஆனால், நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. அவர்களை அச்சம் பீடித்துள்ளது. செல்கின்ற இடமெல்லாம் இப்போது எமது இளம் வேட்பாளருக்கு அமோக வரவேற்புக் கிடைக்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

