இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 12 பேர் இன்னுமொரு வேட்பாளருக்கு ஆதரவு தேடியும், தேர்தல் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் களமிறங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பதனையும், அவருக்காக வாக்குச் சாவடிகளில் கூடுதலான பிரதிநிதிகளை அமர்த்துவதனையும் நோக்காகக் கொண்டு இந்த வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னும் சிலர் வேட்பாளராக களமிறங்குவதற்குக் காரணம், வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கே ஆகும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

