உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்காத ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என, பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவத்தகமை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

