தபால்மூல வாக்களிப்பு சுமூகமான முறையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்ததாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால்மூலம் வாக்களிப்பதற்காக 6 லட்சத்து 59 ஆயிரத்து 515 அரச பணியாளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
இம்முறை தபால்மூல வாக்களிப்புகள் அதிகூடிய எண்ணிக்கையில் அமைந்திருந்ததாக தேர்தல் கண்காணிப்பு குழுவான பெஃப்ரல் தெரிவித்துள்ளது.
தபால்மூல வாக்களிப்பிற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த தினங்களில் தபால்மூல வாக்கினை பதிவு செய்ய முடியாத வாக்காளர்கள், எதிர்வரும் 7ம் திகதி தமது வாக்கினை பதிவு செய்ய முடியும்.
அதேநேரம் எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் பொலிஸ், மாவட்ட மற்றும் தேர்தல்கள் செயலகம் என்பவற்றின் அரச அலுவலர்கள் தங்களது தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

