சம்பிக ரனவகவை பிரதமராக நியமிப்பதாக சஜித் அறிவித்தால் முஸ்லிம் தலைமைகள் சஜித்துக்கான ஆதரவை விளக்கிக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,
சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால், இனவாதிகளின் பிறப்பிடம் சம்பிக ரனவகவை பிரதமராக நியமிக்க ஆலோசனைகள் நடப்பதாக நம்பகமாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் நாம் மிக அவதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். சம்பிக ரனவக என்பவர் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே முஸ்லிம் விரோத பிரசாரத்தை துவங்கி இந்த நாட்டில் இனவாதத்தினை வித்திட்ட முக்கியஸ்தர்.
நூறு ரதன தேரர்களுக்கும் , ஆயிரம் கம்மன்பிலக்களுக்கும் சமமானவரே இந்த சம்பிக என்பதை எமது முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அல்கைதா அல் ஜிஹாத் என்ற நூலை எழுதி முஸ்லிம் விரோத போக்கிற்கு இலங்கையில் புதிய பரிணாமத்தை கொடுத்துள்ள சம்பிக ரனவக பிரதமராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டால் சஜித்துக்கு முஸ்லிம் தலமைகள் வழங்கிவரும் ஆதரவை உடன் வாபஸ் பெற வேண்டும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரியுள்ளது.

