தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மக்கள் இன்று வறுமை மற்றும் ஏழ்மையில் சிக்கி தவிக்கின்றனர்.
சிறந்த வேலைத் திட்டங்கள், சிறந்த நோக்கம், சிறந்த இலக்கு, வேலை செய்ய முடியும் என நிரூபித்த ஒருவராலேயே அது சாத்தியமாகும்.
அனைவரின் சம்மத்துடனேயே கோட்டாபய ராஜபக்ஷவை நாம் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தோம்.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க நாம் யோசித்தோம். அதற்காகவே நாம் அவரை வேட்பாளராக நியமித்தோம்.
பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இது தொடர்பாக நன்கு அறிந்த ஒருவராலேயே இதனை செயற்படுத்த முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷ தவிர்ந்த வேறு எவருக்கும் அதனை செய்ய முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

