புதிய ஜனநாயகவாத முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாதம் 31 ஆம் திகதி கண்டியில் வைத்து வெளியிடப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள இராணி ஹோட்டலில் காலை 9.00 மணிக்கு இந்தக் கொள்கை வெளியீடு இடம்பெறவுள்ளது. நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லும் புதிய கொள்கைகள் இதில் அடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றிலேயே ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கைப் பிரகடனம் ஒன்று கண்டியில் வைத்து வெளியிடுவது இதுவே முதல் தடவை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

