ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் இளைஞன் ஒருவரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை மாலபே நகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உரையாற்றிய போது சுயாதீன ஊடகவியலாளர் என கூறும் இளைஞர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்ப முயற்சித்துள்ளார்.
இதன் போது அங்கிருந்தவர்கள் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது எழுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

