ஸ்ரீலங்கா கடற்படைத் தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது ITJP (The International Truth and Justice Project) என்ற சர்வதேச அமைப்பு.
ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி தலைமையில், தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட ‘The Black Ops Unit’ என்ற விசேட புலனாய்வுப் பிரிவு அந்த இரகசிய முகாமின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்ததாகவும் ITJP அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தச்குற்றச்சாட்டுக்களுக்கான பல ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ITJPஇனால் வெளியிடப்பபட்டுள்ள “முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கை கடற்படை” என்ற அறிக்கை திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் 11 பேர் காணாமற் போனமை பற்றி இலங்கைக்கு உள்ளே பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை,தப்பி பிழைத்தவர்களிடமும் மற்றும் உள்சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலங்களுடன் ஒப்பீடு செய்துள்ளது.
அந்த அறிக்கையானது பாரதூரமான விசாரணை தவறுகள் , கருத்துவேற்றுமை அரசியல் தலையீடுகள் போன்றவற்றை இந்த இலங்கை வழக்கில் அடைளாயங்கண்டுள்ளது. 2009 இல் சிவில் போர் முடிவடைந்ததுடன் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் நிறுத்தப்படவில்லை அத்துடன் சித்திரவதை ஒரு கடற்படைத்தளத்தில் மட்டும் இடம்பெறவில்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது .

