மலையக்தில் ஆறுமுகன் தொண்டமானோடு இணைந்து எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி விடியற்காலை மஹிந்த மற்றும் கோத்தபாய ஆகியோரின் கையில் இந்த நாட்டை ஒப்படைக்க நாம் தயாராக வேண்டும் என பூண்டுலோயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எம்.பி. எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் மலையகத்தின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானோடு கைகோர்த்து நம் நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்து நவம்பர் 17ம் திகதி விடியற்காலையில் இந்த நாட்டை அவர்களின் கரங்களில் ஒப்படைக்கவேண்டும் என மேலும அவர் தெரிவித்துள்ளார்.
23.10.2019. பூண்டுலோயா நகர மைதானத்தில் ஸ்ரீலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யபட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
ரணசிங்க பிரேமதாச 1987ம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயாராகியிருந்தார். அந்தவேளையில் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஒரு யோசனை ஒன்று முன்வைக்கபட்டது.
மீண்டும் ஜே. ஆர் ஜெயவர்தனவை கொண்டுவர இந்த யோசனையை முன்கொண்டு வந்தது குளியாபிட்டியவில் உள்ள பிரதி உயர்கல்வி அமைச்சர் லயனல் ஜயதிலக்க இந்த யோசனையை முன்மொழிந்தவர் களுத்துறை மாவட்டத்தின் ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மெரில்காரியவசம்.
ஆனால் ரணசிங்க பிரேமதாச பிரதமர் இந்த இருவரையும் கொலைசெய்வேன் என கூறியதை இந்த இடத்தில் கூறிகொள்ள ஆசைப்படுகிறேன்.
அதனை அவர் நிறுத்தவில்லை ஜே.ஆர் கொண்டு வருவதற்கு துடிக்கிறார். ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஹரிஷ அபேவர்தன் துடிக்கிறார். கட்சியின் செயலாளர் நந்தலால் பெனார்ந்து இந்த இரண்டுபேரையும் வெடி வைத்து கொலைசெய்தார்.
அதன் பிறகு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி தேர்தலுக்கு வந்தார். எப்படி வருகிறார் மக்கள் விடுதலை முன்னணியை பலபடுத்தினார். பணம் வழங்கினார். வாகணங்களை வழங்கினார். வெடிகுண்டுகளை வழங்கினார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி தேர்தல் வேண்டாமென கூறுகிறது.
வாக்களிக்க சென்றால் கொலைசெய்யபடுவார்கள். தேர்தல் கூட்டங்களுக்கு சென்றால் கொலைசெய்யபடுவார்கள். ஆனால் ரணசிங்க பிரேமதாசவின் தேர்தல் கூட்டங்கள் இடம்பெறும்.
தேர்தல் தினத்தில் முன்பு வாக்குபெட்டிகளை தேர்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல் பொலிஸ் நிலையங்களில் வைத்துகொண்டு ஜக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் ரணசிங்க பிரேமதாசவிற்கு வாக்களிப்பார்கள். இவ்வாறுதான் ரணசிங்க பிரேமதாச அரசியலில் வளர்ச்சியடைந்தார்.
2004ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அதன் பிறகு அவர் ஜனாதிபதியானார். அவர் யாரையும் கொலைசெய்யவில்லை வாக்கிளிக்க வாய்ப்பு வழங்காமல் இல்லை.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யும் போது ரணில் விக்கிரமசிங்க வடகிழக்கை பிரபாகரனுக்கு எழுதிவைத்திருந்தார். 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தை முறியடித்து இந்த நாட்டை மீட்டெடுத்தது மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்சவிற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியது கோத்தபாய ராஜபக்ச. இன்று வேட்பாளராக தெரிவுசெய்யபட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு மக்கள் இன்று வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்.
வடகிழக்கு மக்கள் பிரபாகரனுடைய ஆவிக்கும் முஸ்லிம் மக்கள் சஹ்ரானுடைய ஆவிக்கும் பயமில்லை. சஹ்ரானுடைய ஆவி இந்தியாவிலும் பிரபாகரனுடைய ஆவி மலேசியாவிலும் உலவுகிறது.
நாடுமுலுவதும் பாதாள குழுவினரை பரப்புவார்கள். தோட்டபுறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு போதை பொருள் கொண்டுசெல்லபடுகிறது.
அரசாங்காத்தில் உள்ள அமைச்சர்கள் போதைபொருளை தோட்டபகுதிகளுக்கு கொண்டு செல்லுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமானால் நாம் எதிர்வரும் 16ம் திகதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதி கதிரையில் அமர்த்தபட வேண்டுமென தெரிவித்தார்.

