ஸ்பெயினின் கட்டலோனியா பிராந்தியத்தில் பெய்த கனமழையில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டலோனியாவின் தென் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆறாக வெள்ளம் பெருக்கெடுத்தோடியதோடு, வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. மோசமான வானிலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 24,000 வீடுகளின் மின்சார சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.இந்தநிலையில், கொட்டும் மழைக்கு இடையே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழையில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன மேலும் 2 பேரை தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

