பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
அதில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்ததாக, பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்திருக்கிறார். அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்

