புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எளிமையான தலைவர் ஒருவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சஜித் மீது அன்பு வைத்துள்ளார்.
அவர் ஊழல் மோசடிகள் அற்ற தலைவர் என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஜனாதிபதி கூறுவதில் உண்மை உள்ளது.
ஜனாதிபதி அவர்களே நீங்குள் செல்லும் போது நல்ல பக்கத்திற்கு செல்லவும். நாம் உங்களை பார்த்துக் கொள்வோம். எனக்கு தெரியும். சஜித் பிரேமதாச எவருக்கும் தீங்கு விளைவிப்பவர் அல்ல. அந்தளவிற்கு எளிமையான, நல்ல மனமுடைய தலைவர். நான் பேஸ்புக்கில் பார்த்தேன். அவர் அணிந்திருந்த சேர்ட் நனைந்து உடலுடன் ஒட்டியிருந்தது. அவர் பனியன் கூட அணிந்திருக்க வில்லை. அந்த அளவிற்கு எளிமையானவர் என்றார்.

