வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஐந்து ஒன்றிணைந்து தயாரித்துள்ள 13 அம்ச கோரிக்கைக்கு நாட்டிலுள்ள எந்தக் கட்சி ஆதரவு வழங்குகின்றது என்பதை நாம் அவதானத்துடன் உள்ளோம் என தெற்கு மகா சங்கத்தின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
13 அம்ச கோரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
இந்த நாட்டிலுள்ள எந்தவொரு கட்சிக்கும் இந்த அடிப்படைவாத, பயங்கரவாத, பிரிவினைவாத சிந்தனைக்கு ஆதரவு வழங்க முடியாது.
குறைந்த பட்சம் இந்த கோரிக்கைகளை கையில் எடுத்து வாசிப்பதற்காகவாவது எந்தவொரு வேட்பாளருக்கும் உரிமை கிடையாது எனவும் தேரர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

