ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக கூச்சல் எழுப்புபவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட ஒரு குழுவினரே என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பான பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு கூச்சலிடுபவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சார்ந்தோர்கள் அல்லர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

