எவ்வித இன, மத, பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி நேற்று வாரியபொல நகரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைப்பதாக கூறியிருக்கின்றார். நான் அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக புதிய அரசாங்கத்தில் எனது பொறுப்பை நிறைவேற்றுவேன் எனவும் பொன்சேகா எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

