690 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்தி வந்தமை தொடர்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிரேஸில் பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீர்கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி சுங்க அதிகாரிகளினால் இச்சந்தேகநபர், கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர், போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, நீண்ட வழக்கு விசாரணையை தொடர்ந்து, சந்தேகநபரை குற்றவாளியாகக் கருதி நேற்று (15) நீர்கொழும்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

