Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகளாவிய ஆயுதக்களைவு – மேம்படுத்த இலங்கை உறுதி

October 16, 2019
in News, Politics, World
0

உலகளாவிய ஆயுதக்களைவு நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்துவதில், ஆயுதக்களைவுக்கான இலங்கையின் நடைமுறை ஆதரவை ஐக்கிய நாடுகள் உயர் பிரதிநிதி இசுமி நகாமிட்சுவுக்கு நியூயோர்க், ஜெனீவா மற்றும் வியன்னாவில் இருந்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க உறுதிப்படுத்தினார்.

நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 74 ஆவது அமர்வில் இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார செயலாளர், ஐ.நா. பொதுச் சபையின் பக்க நிகழ்வுகளில் 2019 அக்டோபர் 7ஆந் திகதி உயர் பிரதிநிதிகளை சந்தித்த போது இந்த உத்தரவாதத்தை அளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஷெனுகா செனெவிரத்ன மற்றும் பிரதி நிரந்தர பிரதிநிதி சத்யா ரொட்ரிகோ ஆகியோர் இதன் போது வெளிவிவகார செயலாளருடன் இணைந்திருந்தனர்.

ஆயுதக்களைவு மாநாட்டின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து ஆயுதக்களைவு மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கணிசமான பணிகளை ஆரம்பிப்பதற்காக 5 துணை அமைப்புகளை அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானம் CD/2019 மூலம் ஒரு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்ட ஆயுதக்களைவுக்கான மாநாட்டின் (CD) தலைவராக இருந்த 2018 ஜனவரி / பெப்ரவரி காலப்பகுதியில் இலங்கை பெற்றுக்கொண்ட அனுபவத்தை ஆரியசிங்க நினைவு கூர்ந்தார்.

2015 நவம்பர் மாதத்தில் ஆபத்தான தானியங்கி ஆயுத முறைமைகள் குறித்த அரச மட்டத்திலான விவாதங்களைத் ஆரம்பித்த, வழக்கமான சில ஆயுதங்கள் தொடர்பான மாநாட்டிற்கான (CCW) உயர் ஒப்பந்தத் தரப்பினர்களின் கூட்டத்திற்கும், 2019 செப்டம்பரில் 2020ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இரண்டாவது மீளாய்வு மாநாட்டிற்கு தேவையான வேகத்தை உருவாக்கிய கொத்தணி ஆயுதங்களுக்கான மாநாட்டிற்கான (CCM) அரச தரப்பினர்களின் கூட்டத்திற்கும் இலங்கை தலைமை தாங்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமது கவலைகளுக்கு உணர்திறன் கொண்டதாக அமையும் அதே நேரத்தில் வெவ்வேறு தரப்பினர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும், நெகிழ்வுத்தன்மை மற்றும் பாதுகாப்புக்களுக்கு இடையில் சரியான சமநிலையைக் கொடுக்கும், முன்னோக்கிப் பார்க்கும் உரையாடலுக்கு உடன்படுவதற்கு உறுப்பு நாடுகள் தயாராக இருக்கின்றன என்பது இலங்கையின் அனுபவம் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஆயுதக்களைவுக்கான மாநாட்டிற்கு தலைமை தாங்கிய போது ஒருமித்த முடிவை உருவாக்கியதில் வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க ஆற்றிய பங்களிப்பிற்கு உயர் பிரதிநிதி நகாமிட்சு தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், ஆயுதக்களைவுக்கான மாநாட்டிற்கு தலைமை தாங்கியமைக்காகவும், ஆயுதக் குறைப்பு தொடர்பான ஏனைய முயற்சிகளுக்கும் இலங்கைக்கு அவர் நன்றிகளை தெரிவித்தார்.

நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள 1 வது குழு, ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஆயுதக்களைவுக்கான மாநாட்டின் அடுத்த அமர்வு மற்றும் இடம்பெறவுள்ள NPT மீளாய்வு மாநாடு ஆகியவற்றுக்கு முன்னர் உடனடியான சவால்கள் குறித்து அவர் தூதுக்குழுவுடன் ஈடுபாடு காட்டினார்.

2019 அக்டோபர் 11ஆந் திகதி நிராயுதபாணியாக்கம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 1வது குழுவிற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு விரிவான அறிக்கையில், அணு ஆயுதங்கள் பரவலாக்கத்தை தவிர்ப்பதற்கும், ஒழிப்பதற்கும், விண்வெளி ஆயுதப் பந்தயத்தைத் தடுப்பதற்கும், எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்கள், சிறு ஆயுதங்கள் மற்றும் இலகுரக ஆயுதங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுப்பதற்கும், மனிதாபிமானமிக்க வகையிலான ஆயுதக் குறைப்பிற்குமான ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளின் அவசியத்தை இலங்கை தூதுக்குழு வலியுறுத்தியது.

எந்தவொரு மனிதக் கட்டுப்பாடும் இல்லாத தானியங்கி பேரழிவு ஆயுத முறைமைகளின் (LAWS) வளர்ச்சியானது, முன்னோடியில்லாத வகையில் மனிதகுலத்திற்கு ஆபத்துகளையும் சவால்களை உருவாக்கியுள்ளது என்ற கவலையை வெளிப்படுத்திய இலங்கை, தற்காலிக கட்டுப்பாடாக தேசிய ரீதியிலான தடையை முன்வைப்பதில் உடனடியான நடவடிக்கைளை எடுப்பதற்கும், அரச நிபுணர் குழுக் கலந்துரையாடல்களில் முழுமையாக ஈடுபடவும், தானியங்கி ஆயுதங்களை உருவாக்கும் திறன்களைக் கொண்ட அரசுகளை ஊக்குவித்தது.

எவ்வாறாயினும், அர்த்தமுள்ள மைய உந்துதலான மனிதக் கட்டுப்பாட்டுடன் ஒழுங்குமுறை விதிமுறைகளை வழங்கும் பிணைக்கத்தக்க சட்டக் கட்டமைப்பு ரீதியான பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு விடுத்தது.

ஆயுதக்களைவு பற்றிய பல்தரப்பு பேச்சுவார்த்தையின் ஒரே அமைப்பென்றவகையில் ஆயுதக்களைவுக்கான மாநாட்டின் (CD) முக்கியத்துவத்தை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.

பெருகிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வரும், சர்வதேச மற்றும் பிராந்திய மூலோபாய நிலப்பரப்புக்களில் ஆயுதக்களைவுக்கான உடன்படிக்கைகளின் பேச்சுவார்த்தை மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ளும் கணிசமான பணியில் ஈடுபட ஆயுதக்களைவுக்கான மாநாட்டின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இலங்கை தெரிவித்தது.

ஆயுதக்களைவுக்கான மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கிய போது CD/2019 இல் ஏற்பட்ட ஒருமித்த கருத்து ரீதியான தீர்மானத்திற்கு மதிப்பு இருப்பதாகவும், தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கான ஒரு கருவியாக இது செயற்படும் என்றும், அதிகாரத்தை நிறைவேற்றுவதற்கான நெருக்கத்தை ஆயுதக்களைவுக்கான மாநாடு கொண்டு வரும் என்றும் இலங்கை தெரிவித்தது.

ஆயுதக்களைவுக்கான மாநாடு தனது 2020ஆம் ஆண்டிற்கான அமர்வை சக ஜி 21 உறுப்பு நாடுகளில் ஒன்றான, 10 வருடங்களுக்கு முன்னர் தனது தலைமையின் கீழ் ஆயுதக்களைவுக்கான மாநாடு இடம்பெற்ற போது இறுதியாக ஒரு வேலைத்திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த அல்ஜீரியாவின் தலைமைத்துவத்தின் கீழ் தொடங்கும் போது, தடைகளை தகர்ப்பதற்கும், சிக்கலான பிரச்சினைகள் குறித்து கணிசமான பேச்சுவார்த்தைகளில் முன்னேறுவதற்கும் தீவிர நடைமுறை நடவடிக்கைகள் தொடங்கப்படும் என இலங்கை நம்பியது.

இது வெற்றிகரமாக இருக்க அரசியல் விருப்பத்தின் ஒருங்கிணைப்பு மூலம் சரியான சமிக்ஞையைப் பெற வேண்டும். ஆயுதக்களைவுக்கான மாநாடு 2020 நடுப்பகுதியில் NPT மீளாய்வு மாநாட்டிற்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையை அனுப்புவதுடன், அது வெற்றிகரமாக அமைவதற்கு அரசியல் விருப்பத்தின் ஒருங்கிணைப்பு மூலம் சரியான சமிக்ஞையைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Previous Post

வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள நீர்த்தேக்கம்!!

Next Post

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Next Post

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures