நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்ததுடன், மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
படையினருக்கு நிவாரணம் வழங்கியதன் ஊடாக, நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்லத் தேவையான வேலைத்திட்டங்களை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே என்றும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

