ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் 11 ஆம் திகதி மாலை 4.30 வரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் 375 பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, இது வரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 360 முறைப்பாடுகளும், வேறு சட்ட மீறல்கள் குறித்து 6 முறைப்பாடுகளும் மொத்தமாக 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

