புத்தளம் – அருவக்காடு குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பான இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை இந்த வாரத்துக்குள் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவக்காடு திட்டத்தின் குப்பை முகாமைத்துவ பிரிவின் அதிகாரி நிமல் பிரேமதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி இரவு அருவக்காடு குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, அங்கு குப்பைகளைப் கொட்டுவதை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான அரச இரசாயன பகுதிப்பாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், குறித்த அறிக்கை இந்த வாரத்துக்குள் கிடைக்கப்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, அருவக்காடு குப்பை மேட்டில் நேற்று முதல் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

