ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தோம்.
அவற்றில் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவிற்கேனும் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று தேர்தல்முறை மாற்றத்தைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்மால் இயலுமாக இருந்திருக்கிறது.
எனினும் ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் ஆட்சியமைத்ததும் இவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

